மோசடி புகாரில் சிக்கினார்... "விஐபி கேர்" நடிகர் ஆர்.கே..! சினிமா டிக்கெட் மோசடி

0 9553

திரைக்கு வராத படத்தின் டிக்கெட்டை கொடுத்து 6 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நடிகர் ஆர்.கே. மீது கொடுக்கப்பட்ட புகார் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எல்லாம் அவன் செயல், அழகர் மலை, ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நடிகர் ஆர்.கே..!

இவர் தலைமுடியை நீளமாக வளர்ப்பதாகவும், தூக்கத்தில் விடும் குறட்டையில் இருந்து விடுவிப்பதாகவும் கூறி, ஆயுர்வேதப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் ஆர்.கே மீது திருப்பூரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மோசடி புகார் அளித்துள்ளார்.

image

அதில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெகஜீவ ன்ராம் என்பவர் மூலம் தனக்கு அறிமுகமான நடிகர் ஆர்.கே, தான் நடித்த வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் 600 டிக்கெட்டுகளை, தலா 1000 ரூபாய்க்கு விற்று மொத்தமாக, 6 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக திருப்பூர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

6 லட்சம் ரூபாயை மொத்தமாக இழந்த சோகத்தில் தற்போதும் அந்த சினிமா டிக்கெட்டுகளை மேஜையில் விரித்து வெறித்து பார்த்துக் கொண்டிருக்கின்றார் பாதிப்புக்குள்ளான கோவிந்தராஜ்.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள நடிகர் ஆர்.கே. தன் மீது புகார் தெரிவித்துள்ள நபரை தனக்கு தெரியாது என்றும் லோக்கல் வினியோகஸ்தருடனான பிரச்சனையில் தன்னை தேவையில்லாமல் இழுத்து விட்டுள்ளார் என்றும் கூறினார்.

இந்த புகாரின் உண்மைத் தன்மை குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments